பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 புறப்பொருள் வெண்பாமாலை துறை வகுத்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. இணைப்பு] 5 (ஊ)]வைப் பார்த்தால் எட்டுத்துறைகள் புறப்பொருள் வெண் பாமாலையிலும் தொல்காப்பியத்திலும் இல்லாத துறைகளாக உள்ளன. இந்த எட்டுத்துறைகளும் மேற்குறிப்பிட்ட வேறு ஒரு இலக்கண நூலில் இருந்திருக்க வேண்டும். இவ்விலக்கண நூல் இன்று வழக்கிலில்லாத புறப்பொருள் இலக்கண நூலாக இருக்கவேண்டும். இந்நூல் புறப்பொருள் வெண்பாமாலைக்கு முன் தோன்றியதாக இருக்கலாமா பின் தோன்றியதாக இருக்கலாமா என்பது கேள்வி. இணைப்பு [5) (இ) என்பதில் புறநானூற்றில் 290 ஆவது செய்யுள் 'வெட்சித்திணை' குடிநிலையுரைத்தல்' துறை என்றுள்ளது. அதற்கு நேசான துறை புறப்பொருள் வெண்பாமாலையில் 'கரந்தைத் திணைக்குரியக் 'குடி நிலை' (35) என்ற துறையாகும். துறைப் பெயரில் சிறிது மாறுபாடு உள்ளது. ஆனால் புறநானூறு அத்துறையினை 'வெட்சித்' திணைக் குரியதாகவும் புறப்பொருள் வெண்பாமாலை 'கரந்தைத்' திணைக் குரியதாகவும் கூறுகின்றன. தொல்காப்பியத்தில் இளம்பூரண குரையில் 'மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே புறத் . கு 62 (இடம்.உரை] என்றுள்ளது. நச்சினார்க்கினியர் 'குடிநிலை' என்ற பாடத்திற்கு மாகுக 'துடிநிலை' என்ற பாடத்தினைக் கொண்டுள்ளார். இந்நூற் பாவில் ஒருவர் 'குடி நிலை' என்றும் மற்றெருவர் 'துடி நிலை' என்றும் பாடம் கொண்டுள்ளனர். புறப்பொருள் வெண்பா மாலைவில் 19 ஆவது கொளு 'துடிநிலை' பற்றியது 20 ஆவது 'கொற்றவை நிலை பற்றியது. மேற்கண்ட சூத்ரத்திற்குப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் காலத்தில் இரண்டு பாடங்களும் வழக்கில் இருந் திருக்கலாம். அவர் ஒருபாட அடிப்படையில் 19ல் துடிநிலையினைச் சொல்லி தொல்காப்பியத்தில் அடுத்துச் சொல்லப்பட்டிருப்பது போல இங்கும் அடுத்து 20ல் கொற்றவை நிலையினை அவ்வரிசையிற் சொல் லியிருக்கலாம்.