பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை 19 புறப்பொருள் வெண்பாமாலையில் துடிநிலை என்ற துறை வெட்சித் திணையில் 19 ஆவது துறையாகக் காணப்பெறுகிறது குடி நிலை என்ற துறை கரந்தைத் திணையில் 35 ஆவது துறையாக உள் மேற்கண்ட தொல்காப்பிய நூற்பாவிற்கு புறப் பொருள் வெண்பா ளது. மாலை ஆசிரியர் இரண்டு பாடங்களையும் கொண்டு இரண்டு துறைகளையுமே கொள்ள எண்ணித் 'துடிநிலை' என்பதனை வெட்சித் திணையிலும் 'குடிநிலை' என்பதனைக் கரந்தைத் திணையிலும் சேர்த்தி ருக்கலாம். தொல்காப்பியரைப் பொறுத்தமட்டில் வெட்சியும் கரந்தையும் வெட்சித்திணையே. அதனால் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் ஒருதுறையினை வெட்சித்திணையிலும் மற்ருெரு துறையினைக் கரந்தைத் திணையிலும் சொல்லியிருந்தாலும் இவ்விரு திணைகளும் தொல்காப்பியருக்கு ஒரே திணையாகையால் துடிநிலை, குடிநிலை என்ற இரண்டையும் தொல்காப்பியர் கருத்துப்படி வெட்சி என்ற ஒரே திணையில் (இருவேறு திணைகளில் புறப் பொருள் வெண்பாமாலையிற் சொல்லப்பட்டிருந்தாலும்) சொல்லிய தாகக் கொள்ளலாம். புறப்பொருள் வெண்பாமாலைக்கு முன்னர் ஒரு புறத்திணை இலக்கணம் இருந்திருக்கலாம் இவ்விலக்கண நூலாசிரியர் காலத் தில் மேற்கண்ட தொல்காப்பிய நூற்பாவில் 'குடிநிலை' என்ற பாடம் ஒன்றே இருந்திருக்கலாம். அதனை அவ்விலக்கண ஆசிரியர் கொண்டு 'குடிநிலை' என்ற துறையினை வெட்சிக்குரியதாக அவ் விலக்கணத்தில் குறிப்பிட்டிருக்கலாம். புறநானூற்றுக்குத் திணை. துறை வகுத்தவர் அதன் வழி 'குடிநிலை' என்பதனை வெட்சியிற் கொடுத்திருக்கலாம். இளம்பூரணர் காலத்தில் குடிநிலை துடிநிலை என்ற பாடங்கள் வழக்கிலிருக்க அவர் குடிநிலை என்ற பாடத்தினை சூத்திரத்தில் சேர்த்திருக்கலாம். நச்சினார்க்கினியர் துடிநிலை என்ற பாடம் கொண்டிருக்கலாம். [இணைப்பு 5 (இ)]யில் 127ஆவது செய்யுள் பாடாண் திணையில் கடை நிலைத் துறையில் உள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில் அத்திணையில் 'வாயினிலை' என்ற துறைதான் உள்ளது. ஆனால் தொல்காப்பியத்தில் அதற்கு நேராக 'சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை' என்றுள்ளது. புறப்பொருள்