பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 20 புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாமாலை 'வாயினிலை' என்ற துறைவருக்க புறநானூறு 'கடைநிலை' என்று தொல்காப்பியத்தில் உள்ள துறைப் பெயரைப் பயன்படுத்தி யுள்ளது. இவைகளினால் தொல்காப்பியத்திற்குப் பின்னரும் புறப்பொருள் வெண்பாமாலைக்கு முன்னரும் புறத்திணை இலக்கணம் கூறும் நூல் ஒன்று இருந்திருக்க வேண்டும். அது தொல்காப்பியத்திற்கு ஏற்பக் கடைநிலை என்ற துறையினைச் சொல்லியிருக்கலாம். அதனை ஏற்றுப் புறநானூற்றுக்குத்திணை துறை வகுத்திருக்கலாம் என்று சொல்லலாம். அவ்விலக்கணம் புறப்பொருள் வெண்பாமாலைக்கு முன்னூள் எனப்பெறும் பன்னிருபடலமாகவும் இருக்கலாம். வேறு நூலாகவும் இருக்கலாம். எந் நூலாயினும் அதில் சில இலக்கண விதிகள் தொல்காப்பியத்தில் இருப்பது போலவும் சிலவிதிகள் பிற்காலத்து எழுந்த புறப்பொருள் வெண்பாமாலையிலிருப்பது போலவும் இருந் திருக்க வேண்டும். புறப்பொருள் வெண்பாமாலையும் புறநானூற்று உரையும் புறநானூற்றுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அதன் காலம் சரியாகத் தெரியவில்லை. அந்த உரை அந்நூலின் முதல் 266 செய்யுட்களுக்கு உளது. அதற்குமேல் உள்ள பாட்டுகளிலும் அடியில் திணை, துறைகள் கூறப்பட்டுள்ளன. அதனால் புறப் பாட்டுக்களுக்குத் திணை துறை, இவ்வுரையாசிரியர் காலத்திற்கு முன்னரே வகுக்கப்பெற்றிருக்க வேண்டும். இதனைமேலே கண்டோம் அவ்வுரையாசிரியர், புறப்பாட்டுகளுக்கு வகுக்கப் பெற்றுள்ள துறைகள் சிலவற்றிற்குத் தம் உரையில் வளக்கம் கூறிச் செல்கின் றார். எவ்வெப் பாட்டின் திணை துறைகள் இவ்வுரையில் விளக்கம் பெற்றுள்ளன என்பதனை [இணைப்பு 6)ல் கொடுத்திருக்கிறது. எல் லாப் பாட்டுக்களிலும் துறைகளுக்கு விளக்கமும் பொருத்தமும் கொடுக்கப் பெறவில்லை. சில பாட்டுக்களின் உரையின் தலைப்பில் துறையினை விளக்கக் கூடிய கொளுச் சூத்திரம் மாத்திரம் தரப் பெற்றுள்ளது. எடுத்துக் காட்டாக 165 ஆம் பாட்டு பாடாண் திணையில் 'பரிசில் விடை ' துறையாகும். இச்செய்யுளின் உரைத் தொடக்கத்தில்