பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை 21 'பரிசில் விடையாவது, "வேந்தனுண் மகிழ வெல்புகழறைந் தோர்க் கீந்து பரிசில் இன்புற விடுத்தன்று' என்றுள்ளது. இக்கொளுச் சூத்திரம் புறப்பொருள் வெண்பாமாலை யில் 214ஆவது சூத்திரமாகும். இதுபோன்று மேற்கண்ட பட்டியலிற் காட்டப்பட்டுள்ள பல செய்யுள்களின் உரைகளின் தலைப்பில் அத் துறையினை விளக்கும் கொளுச் சூத்திரங்கள் உள. அவ்விவரத் தினை [இணைப்பு(6)]ல் காணலாம். இக் கொளுச் சூத்திரங்கள் எல்லாம் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுச் சூத்திரங்களே யாகும். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது இவ்வுரையாசிரி யர் புறப்பொருள் வெண்பாமாலையினை மனதிற் கொண்டே புற நானூற்றுத் திணை துறைகளுக்கு விளக்கம் சொல்லியுள்ளார் என். பதாகும். புறநானூற்று 36 45 46 57 ஆவது செய்யுள்களுக்கு 'துணை வஞ்சி' என்னும் துறை வகுக்கப் பெற்றுள்ளது. இத்துறையோ இத்துறைக்கு நேரான துறையோ புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லையென்று சொல்லலாம். உரையாசிரியர் இந்த நான்கு செய் யுன்களின் உரையிலும் இப்பாட்டு துணை வஞ்சித் துறையாவது எங்களம் பொருந்தும் எனறு விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக 36ஆவது செய்யுள் உரையில் 'மேற்சென்றேனைச் சந்து செய்து மீட்டலின் இது துணைவஞ்சி யாயிற்று' என்கிறர். புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லாத இத்துறைக்கு இவ்வுரையாசிரியர் அவர் காலத்திலிருந்த வேறு ஒருபுறப்பொருள் இலக்கண நூலினைப் பார்த்து இவ்விளக்கம் கூறியிருக்கவேண்டும். இது போன்று புறநானூற்று 58ஆவது பாட்டு 'உடனிலை' என்ற துறையாகும். இத்துறையும் புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லாத துறை யாகும். இதற்கும் உரையாசிரியர் மேற்குறிப்பிட்டபடி பிரிதொரு நூலினைப் பின்பற்றி விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். சில பாட்டுக்களுக்கு ஒரு திணை துறைக்கு மேலாக வேறு திணையும் துறையுமோ துறை மாத்திரமோ கூறப்பெற்றுள்ளன. இதுவும் இவ்வுரையாசிரியர் காலத்திற்கு முன்னரே எழுதப் பெற் றிருத்தல் வேண்டும். ஏனெனில் உரையாசிரியர் அப்படி வரும் இடங்கள் சிலவற்றில் இரண்டிற்கும் விளக்கம் சொல்லிச் செல்