பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 புறப்பொருள் வெண்பாமாலை கின்றார். எடுத்துக்காட்டாக 5ஆவது பாட்டின் உரையில் 'காவல் கொள்பவரினோம் பென்றமையான்' 'செவியறிவுறூடவும்" "அருளும் அன்பும் நீங்கி நீங்கா திரயங்கொள்பவரோ டொன்றது" என்ற மையாற் பொருண் மொழிக் காஞ்சியுமாயிற்று' என்பர். • துறை விளக்கம் கூறியதில் உரையாசிரியர் ஒரு முறையினைக் கையாண்டதாகத் தெரியவில்லை. எல்லாத் திணைத்துறைகளுக்கும் விளக்கமும் பொருத்தமும் தரவில்லை. ஒரு துறைக்கு விளக்கம் அத்துறை அந்நூலில் முதலாவதாக எந்தப்பாட்டில் வருகின்றதோ அங்கு விளக்கம் கூறி ஏனையிடத்திற் கூருது விட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரு துறை வருகின்ற பித்திய பாட்டில் விளக்கம் வருகிறது. முந்திய பாட்டில் விளக்கம் இல்லை. எ. டு. 'செவியறிவுறுஉ என்ற துறை முதலில் புறம் 2ஆவது பாட்டில் உள்ளது. அங்கு உரை யாசிரியர் அத்துறையினை விளக்கவில்லை. 5ஆவது பாட்டும் அத் துறைதான். அப்பாட்டின் உரையில்தான் அத்துறைக்கு விளக்கம் சொல்கிறார். மேலும் ஒரு துறைக்கு அத்துறை வரும் பல பாட்டுக் களில் உரையில் விளக்கம் கொடுக்கிறார். எ.டு. துணைவஞ்சி செய் யுன்கள் 36,45,57, ஒருவேளை விளக்கத்திற்காக அன்றி அத்துறை யினைப் பாட்டின் டெருனோடு பொருத்திக் காட்ட விளக்கியிருக் கலாம் என்று ஓர் அமைதி இதற்குக் கூறலாம். இனி, துறையை விளக்கும் புறப்பொருள் வெண்பாமாலை கொளுச் சூத்திரத்தினை ஒரு துறை வரும் ஒரு பாட்டின் உரையிற் கொடுத்தாற் போதும். அத்துறை வருகின்ற ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் இக் கொளுச் சூத்திரங்கள் காணப்பெறுகின்றன. எ.டு. ஆனந்தப்பையுன் என்ற துறைக்குரிய புறப்பொருள் வெண் மாலைக்கு கொளுச் சூந்திரம் பாட்டு 228, 246 உரைகளில் உள்ளன. [இணைப்பு(6)]ஐப் பார்க. பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பாமாலையும் தொல்காப்பியத்திற்குப் பின் எழுந்த சங்க நூல்களில் பதிற்றுப் பத்தும் ஒன்று. இந்நூலில் இப்பொழுது 80 செய்யுள்கள் கிடைத் துள்ளன. இச்செய்யுள்கள் ஒவ்வொன்றின் கீழும் துறைகள் உள். அப்பதினேழு துறைகள் வருமாறு: செந்துறைப் பாடாண் பாட்டு (37)