பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை 23 பாடாண் பாட்டு (2) வாழ்த்து (1) பெருஞ் களவழி (1) வாகை (2) இயன்மொழி வாழ்த்து (5) பரிசிற்றுறைப் வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு {11) நாடு சோற்றுநிலை (1) தும்பை அரவம் (2) விறலியாற்றுப்படை (6) காட்சி வாழ்த்து (6) குரவை நிலை (1) ஒள்வாளமலை (1) பாணாற்றுப்படை (i) உழிஞை அரவம் (1) முல்லை: (1) காவல் முல்லை (1) (மேலே உள்ள துறைகளுக்கு அடுத்துஇரு தலைப் பிறைவளைவினுள் கொடுக்கப் பெற்ற எண் அத்துறைகளில் வந்துள்ள செய்யுள்களின் எண்ணிக்கையாகும்) புறநானூற்றில் ஒவ்வொரு செய்யுனின் பின்னரும் அச்செய்யு * னிற்குரிய துறை உள்ளது அத்துறையுடன் இத்துறை எத்திணைக் குரியதோ அத்திணையினையும் காணலாம். மேற்கூறப்பெற்ற 17 துறைகளை மாத்திரந் தான் பதிற்றுப்பத்துச் செய்யுள்களின் கீழ்க் காண்கிறோம். அத்துறைகள் எத்திணைகளுக்குரியளவோ அத்திணைகள் தரப்பெறவில்லை. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணையினையும் சொல்லி அத்திணைக்குரிய துறைகள் கூறப்பெற்றுள் ளன, புறப்பொருள் வெண்பாமாலையிலும் திணைகளும் திணைக்குரிய துறைகளும் கொடுக்கப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் துறைகள் மட்டுமே உள்ளன. துறையினைச் சொன்ன மாத்திரத்தாலே கற்ற றிந்த புலவர்களுக்குத் திணைகள் தெரியவரும் என்ற எண்ணத்தில் திணைகள் சொல்லப்பெறவில்லையோ என்பது தெரியவில்லை, அல்லது சங்க அகப்பாடல்களுக்கு நற்றினை போன்ற நூல்களில் துறைகள் என்று கூறப்பெறும் கிளவிகள் மட்டும் வகுக்கப்பெற்று இன்ன அகத்திணையினைச் சேர்த்தது என்பது கூறப்பெருது விடப்பட்டது' போன்று இங்கும் திணை விடப்பட்டதா என்பது தெரியவில்லை. தொல்காப்பியத்திலும் புறப்பொருள் வெண்பாமாலையிலும் இல்லாத சில துறைகள் இந்நூலில் உள்ளதைக் காணலாம். எ.டு. காட்சி வாழ்த்து (41, 54, 61, 64,: குரவை நிலை (52) உழிஞை அரவம் (77), முல்லை (81), புறத்திணை இலக்கணங்களில் வாகை (39) என்பது திணையாய்ச் சொல்லப்பெற இங்கு அது துறையாகக் கொடுக்கப் பெற்றுள்ளது.