பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 புறப்பொருள் வெண்பாமாலை புறப்பொருள் வெண்பாமாலைத் துறைகளும் ஒன்றுக்கு மேற்பட்ட கொளுக்களும் வரு புறப்பொருள் வெண்பாமாலையில் எடுத்துக்காட்டுகளாக பவை மொத்தம் 361 வெண்பாக்களாகும். சில துறைகளில் ஒருதுறையின் கீழ் 'இதுவுமது' என்று சொல்லி இரண்டு அல்லது மூன்று வெண்பாக்கள் எடுத்துக் காட்டுக்களாகத் தரப்பெற்றுள்ளன. அதாவது எடுத்துக் காட்டு வெண்பாக்கள் இரண்டாகவோ மூன்றாகவோ இருந்து துறையின் பெயர் ஒன்று கவே உள்ளது. எடுத்துக் காட்டாக 129,130,131, எண்ணுள்ள மூன்று வெண்பாக்கள் தும்பைத் திணையில் 'தானைமறம் என்ற துறைக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. மூன்று வெண்பாக்களுக்கும் முன்னர் மூன்று கொளுக்களில் விளக்கங்கள் உள்ளன. அவை வருமாறு: 129 தாம்படைத் தலைக்கொள்ளாமை ஓம்படுத்த உயர்வு கூறின்று 130. பூம்பொழிற் புறங்காவலனை ஓம்படுத்தற்கு முரித்தென மொழிப் 131. வேற்றானை மறங்கூறி மாற்றார தழிபிரங்கினும் ஆற்றிறுணரி னத்துறை யாகும். இம்மூன்று கொளுக்களும் 'தானைமறம்' என்ற துறையின் கீழ்க் காணப்படினும் இக் கொளுக்கள் கூறும் பொருள்கள் வேறு வேறு ஆகும். அதனால் இவைகளை மூன்று துறைகளாகக் கொண்டு மூன்று பெயரிட்டழைத்திருக்கலாம். ஒரே பெயர் கொடுப்பதனால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம். இங்ஙனம் ஒன்றுக்கு மேற்பட்ட கொளுக்களையும் எடுத்துக்காட்டு வெண்பாக்களையும கொண்டவை பற்றிய விவரத்தினைப் (இணைப்பு 7,அ)} பட்டியலிற் காணலாம். ஒரு துறையின் கீழே பல கொளுக்கள் காணப்பெறினும் ஒவ் வொரு கொளு சொல்கின்றதனையும் ஒவ்வொரு துறையாகக் கொள்வதே முறையாகும். புறப்பொருள் வெண்பாமாலைக்கு முன்னர்