பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை 25 புறத்திணையினைக் கூறுகின்ற இலக்கணங்கள் பல இருந்திருக் கலாம். ஓர் இலக்கண நூலில் தும்பையில் தானை மறமாக 129ஆம் கொளுச் சூத்திரம் சொல்லும் கருத்துக் கொள்ளப்பட்டு மற்றொரு நூலில் 130ஆம் கொளுச் சூத்திரம் சொல்லும் செய்தி இடம் பெற்று இன்னெரு நூலாசிரியர் 131 ஆம் கொளுச் சூத்திரப் பொரு ளைத் தும்பைத்திணை, தானை மறத்துறையாகச் சொல்லியுமிருக்கலாம் இம்மூன்று விளக்கங்களையும் ஐயனாரிதனார் கொள்ள விரும்பித் தன் நூலில் இவைகளைக் கூறியிருப்பர். இஃதேபோன்று ஒன்றுக்கு மேற் பட்ட கொளுச்சூத்திரங்களை ஒரு திணையிலோ பல திணைகளிலோ கொண்ட துறைகளுக்குச் சொல்லலாம். ஆனால் தெளிவிற்காகவும் குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவும் 'தானைமறம்' என்ற பெயரில் வரும் மூன்று கொளுக்களில் ஒன்றிற்குத் தானைமரம் என்ற பெயரைக் கொடுத்து மற்றவற்றிற்கு வேறு பெயர்களைத் துறைப் பெயர்களாகக் கொடுத்திருந்தால் நலமாயிருக்கும். இங்ஙனம் ஒருதிணையில் இரண்டு கொளுக்களைக் கொண்ட துறைகள் இந்நூலில் 23 துறைகளாகும். புறத்திறை என்ற துறை வெட்சித்திணையில் உள்ளது. உழிஞைத் திணையிலும் புறத்திறை என்ற துறையினைக் காணலாம். இதுபோன்று ஒரு துறை ஒரு திணையிலே மாத்திரமில்லாது பிறி தொரு திணையிலும் கூறப்பெற்றுள்ளது. அதன் விவரத்தினை [இணைப்பு 7(ஆ)] பட்டியலிற் காணலாம். இங்ஙனம் 10 துறைகள் இருதிணைகளில் ஒவ்வொரு திணையிலும் ஒவ்வொரு துறையினைக் கொண்டுள்ளன.ஒரே திணையில் மூன்று கொளுக்களைக் கொண்ட துறைகள் மூன்று (குற்றுழிஞை, தானைமறம், கற்புமுல்லை.ஆகும். இவையல்லாது கொற்றவை நிலை' என்ற துறைக்கு வெட்சிப் படலத்தில் ஒரு கொளுவும் வஞ்சித் திணையில் இரண்டு கொளுக் களும் உள. கையறுநிலை என்ற துறை கரத்தைப்படலத்தில் ஒரு கொளுவினையும் பொதுவியற் படலத்தில் இரண்டு கொளுக்களையும் கொண்டுள்ளது. தொல்காப்பியத்திலும் ஒரு பெயருடைய துறை இரண்டு தீணைகளிற் பேசப்படுகின்றது. எடுத்துக்காட்டாக 'வள்ளி' என்ற துறை வெட்சித்திணையில் 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்' என்று தொடங்குகின்ற நூற்பாவில்