பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 புறப்பொருள் வெண்பாமாலை 'வாடா வள்ளி வயவர் ஏத்திய ஓடாக்கழனிலை (தொல் புறத்.60.நச்) என்று வருகிறது. பாடாண்திணையில் ஒரு வள்ளி உள்ளது. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு "கண்ணிய வருமே (தொல். புறத் 88 நச்) அதேபோன்று 'கொற்றவள்ளை' என்ற துறை வஞ்சித்திணையிலும் பாடாண் திணையிலும் இடம் பெறுகின்றது. வஞ்சித்திணையில் ‘இயங்குபடையரவம்' என்று தொடங்கும் நூற்பாவில் "குன்றச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் (தொல், புறத். 7) என்பதும் பாடாண்டிணையில், கொற்ற வள்ளை ஓரிடத் தான (தொல். புறத்.28) என்ற நூற்பாவும் கொற்றவள்ளையைக் கூறுகின்றன. தொல்காப் பியர் காலத்திலேயே ஒரு பெயர் இரண்டு துறைகளுக்கு இருப் பதையும் இருவேறு திணைகளில் ஒருதுறை வருவதையும் இவை காட்டுகின்றன,