பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஐய னாரித னகலிடத் தவர்க்கு 10 மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப் பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே. என்பது பாயிரம். இதனுள் பாயிரம் உரைத்த எல்லாம் உரைத்துக் கொள்க. இதன் பொருள்: நின்று நிலைத்த நன்மையினை உடைய தேவர்கள் வேண்டிக்கொள்ளப் பொதியின் மலையில் இருந்த அழகமைந்த இருடி தன்னிடத்துக் குளிர்ந்த தமிழை வருத்தமின்றி அறிந்த கிட்டுதற்கு அரிய மிக்க புகழினையுடைய தொல்காப்பியன் என்னும் ஆசிரியன் முதலான பன்னிருவரான அறிஞரும் பகுதியில் மிகச் சொன்ன பன்னிருபடலமென்னும் நூலினைக் குற்றமின்றியே அறிந்தோன், உயர்ந்த மேம்பாட்டினையுடைய பூமியை முழுதும் ஆண்ட வளைந்த வில்லைப் பெருத்த கையிலே உடைய சேரமான்கள் வழியில் உள்ளான்; ஐயனாரிதன் என்னும் பெயரினை உடையவன், பரந்த நிலத்தில் உள்ளவர்க்குக் குற்றமற்ற புறப்பொருளை வழுவு தலின்றியே தெளிய வெண்பாமாலை என்னும் நாமத்தினை நிறுத்தி நன்மை மிகச் சொன்னாள், முறைமையாலே ஆராய்ந்து என்றவாறு. ஏகாரம், ஈற்றசை: பான்மையில் தெரிந்து பண்புற மொழிந் தனன் ஐயரினாதன் எனக் கூட்டுக. மன்னிய-தெரிந்த என்றுமாம். முனிவரன் - இருடிகளில் வரனாயுள்ளான்; அவள் அகத்தியன் என்றறிக. சிறப்புப் பாயிரம் முற்றிற்று முதலாவது வெட்சிப்படலம் (சூத்திரம் 1) வெட்சி வெட்சி யரவம் விரிச்சி செலவு வேயே புறத்திறை யூர்கொலை யாகோள்