பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப்படலம் பூசன் மாற்றே புகழ்சுரத் துய்த்தல் தலைத்தோற் றம்மே தந்துநிறை பாதீ 5 டுண்டாட் டுயர்கொடை புலனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்தும் நிலையே கொற்றவை நிலையே வெறியாட் டுளப்பட எட்டிரண் டேனை நான்கொடு தொகைஇ வெட்சியும் வெட்சித் துறையு மாகும். என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், திணையும் துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 3 வெட்சித் ள். வெட்சி, வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத் திறை, ஊர்கொலை,ஆகோள், பூசன்மாற்று, சுரத்துய்த்தல், தலைத் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளைவழக்கு,துடிநிலை, கொற்றவை நிலை, வெறியாட்டு என இவை இருபதும் வெட்சித்திணையும் துறையுமாம் எ-று. வெட்சி வெட்சி என்பது இருவகைத்து; மன்னுறு தொழி லும் தன்னுறு தொழிலுமென. வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றி கன்முனை யாதந் தன்று. இ - ள், வெற்றியினையுடைய அரசன் ஏவவும் ஏவலின்றியும் போய் மாறுபாட்டினை உடைய வேற்றுப்புலத்துப் பசு நிரையைக் கைக்கொண்டது எ - று. அவற்றுள், 1. மன்னுறு தொழில் வருமாறு: dhe இ - ள் முன்பு சொன்ன இரண்டனுள்ளும் மன்னுறுதொழில் வரும் முறைமை எ-று.