பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். கணையஞ்சூழ்ந்த சீறூரில் இருளையுடைய மாலைக்காலத்து முற்றத்திலே திரண்ட நம் கூட்டம் கைகுவித்து நிற்பக் கட்சாடி யிருக்கும் ஏணியிற் குடத்துக்கள்ளை நீ எடுத்துக்கொண்டு வாவென் றாள்; ஆதலால், வளைந்த வில்லைப் பெரிய கையிலே உடையவனே; நமக்கு வெற்றியைத் தரும் எ - று. 'குடக்கணா கொண்டுவா வென்றாள்' என்று பாடமோதி மேல் பால் தொழுவத்திற் பசுவை அடித்துக் கொண்டுவாவென்றாள் என்றுபொருள் உரைப்பாருமுளர். 5.செலவு வில்லே ருழவர் வேற்றுப் புலமுனிக் கல்லேர் கானங் கடந்துசென் றன்று. இ-ள் வில்லாகிய ஏரினையுடைய உழவர் மாற்றாரிடத்தைக் கருதிக் கல்பொருந்தின காட்டைக் கழிந்துபோனது எ-று வ-று. கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப் பாற்றினம் பின்படர முன்படர்ந் - தேற்றினம் நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய குன்றங் கொடுவில் லவர். ள்கூற்றின் குழுவினை ஒப்பார் வளைந்த வில்லை இடப்பக் கத்திற்கொண்டு கழுகும் பருந்தும் பின்னே தொடர்ந்துவரத் தமது வலியானே நெருங்கிப்போனார், வளைந்த வில்லாளர் தம் ஏறு பொருந்திய பசுநிரை நின்ற நிலையையுடைய உயர்ந்த மூங்கிலை யுடைத்தான குன்றத்தை நினைத்து எ-று. ஏகினார் கூற்றினத்து அன்னார் எனக் கூட்டுக.