பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1.வெட்சிப்படலம் 6. வேய் பற்றார் தம்முனைப் படுமணி யாயத் தொற்ற ராய்ந்த வகையுரைத் தன்று a 7 இ-ள். பகைவர் தம்முனையிடத்து ஒலிக்கும் மணியினையுடைய நிரையிடத்து ஒற்றினைத் தெரிந்த கூறுபாட்டிளைச் சொல்லியது எ-று வ - று. நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற சிலையுஞ் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென் நள்ளிருட்கண் வந்தார் நமர். [றறிந்து இ - ள். பசு நின்ற இடமும் பசுவினுடைய அளவும் பசுவினுடைய புறங்காத்துநின்ற விற்படையின் அளவும் போர்ப்புலத்தில் தங்கிப் பச்சிலை யுடனே விரவித்தொடுத்த தேன்பொழியும் மாலையினையும் வீரக்கழலினையும் உடைய போரை' விரும்பியோய், வேற்றுப்புறத் திலேபோய் ஆராய்ந்து நடுவிருளிடத்து நம் சுற்றத்தார் வந்தார் எ-று. 7. புறத்திறை நோக்கருங் குறும்பி னூழையும் வாயிலும் போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று (6) இ-ள். பகைவரது கண்ணாற் பார்த்தற்கு அரிய குறும்பின் நூழையும் பெருவாயிலும் யாவரும் புறப்படாதபடி வளைந்து ஊர் மருங்கே விட்டது எ - று வறு. உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோல் முந்தமருளேற்றார் முரண்முருங்கத் - தந்தமரின் ஒற்றினா னொற்றி யுரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து,