பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கரந்தைப்படலம் 19. போயினார், நிரைபோன அடிப்பாடே, நிழல்விடும் சுடர்வேல் ஒளி விட நிரைத்து, எ-று. 25. போர்மலைதல் வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி யுறழ்செருப் புரிந்தன்று. (3) இ-ள். வெட்சியாரைக் கிட்டிச் சூழ்த்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது. எ-று. வ-று. புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமு மானமுந் தேசும்-ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச் செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து. இ-ள். புலியினது திரளும் சிங்கமும் போர்பொரும் யானையும் ஒப்பார், வலிமிக்க சீற்றமும் அபிமானமும் பெருமையும்; ஆர வாரிக்கும் கிட்டுதற்கு அரிய பகைப்புலவழியிலே நிரைகொண்டார் வெட்சியாரென்னும் ஆரவாரத்தாற்கடுகிப் பூசலைச்செய்தார், கோப மிக்கு. எ-று. சிறந்து செருமலைந்தாரென்க. 26. புண்ணெடுவருதல் மண்ணோடு புசழ்நிl இப் புண்ணோடுதான் வந்தன்று. (4) இ-ள். பூமியுடனே இசையை நிறுத்தி ஆயுதம்பட்ட புண் ணுடனே வீரன்றான் வந்தது. எ-து.