பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 வ-று புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வெங்குருதி மல்க விழுப்புண் ணுகுதொறூஉம் இங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்- பங்கண் இனம்போக்கி நின்றா ரிகல்வாட்டி வேந்தன் மனம்போல வந்த மகன். இ-ள். வெவ்விய உதிரம் மிக முகத்தினும் மார்பினும் பட்ட புண்ணினின்றும் விழவிழச் சாதிலிங்கமசொரியும் வரையைஒக் கும்; பைங்கண்ணினை உடைய பசுவினத்தை முன்னே செலுத்தி நின்ற வெட்சியாருடைய மாறுபாட்டைக்கெடுத்து மன்னன் நெஞ் சினை ஒப்ப வந்த வீரன். எ-று. வீரன் இங்குலிசுஞ் சோரும் வரையை யொக்கும் என்க. வேந்தன் மனம் வெற்றியையே நினையும். 27. போர்க்களத்தொழிதல் படைக்கோடா விறன்மறவரைக் கடைக்கொண்டு களத்தொழிந்தன்று, (5) இ-ன். பகைவராயுதத்திற்குப் புறங்கொடாத வெற்றியினை யுடைய வீரரைக் கூட்டித் தான் பூசற்கரியிலே பட்டது. எ-று. வ-று உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான்-புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக் களப்பட்டான் றோன்றான் கரந்து. இ-ள். சொல்லின் அஃது அதிசயமோ? பகைவர் கைப்பற்றின நிரையின்பின்னே பெரிய மேம்பாட்டினை உடையவன் சென்றன். ஒப்பின்றிக் சுருதப்பட்ட உடம்பிடமெல்லாம் ஒள்ளிய வான்