பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 வ-று. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவா ளுறைகழியாப் போர்க்களத்து ஓவான் துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின் றடியிரட்டித் திட்டாடு மாட்டு. இ-ள். பகைவர் உயிர்உலரத் தலையினை நீக்கிக் கவந்தமாக்கி நின்ற பிள்ளைத்தன்மையை எய்தியவன் பொலிவினையுடைய வாளினை உறையினின்றும் வாங்கிப் பூசற்களரியிலே ஒழியான்; துடி கொட்டி ஆர்ப்பரவம் மிகக் கட்டிய வீரக்கழலினையுடையார் முன்னே நின்று இட்ட அடியின்மேல் அடியிட்டு ஆடுங்கூத்து. எ-று. ஆட்டு ஓவான் என்க. 30. பிள்ளை யாட்டு கூடலர்குடர் மாலைசூட்டி வேறிரித்து விரும்பியாடின்று, (8) இ-ள். பகைவர்குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத் திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது. எ-று. வ-று. மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய வெஃங் குடர்மாலை - சூட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்ழுந் துடி. இ-ள். பகைவரை மாளப்பண்ணின பிள்னைத்தன்மையை எய்தி யவன், வீரருடைய மார்பங்களைத் திறந்து தெரிந்து பறித்தவேலைப் பகைவருடைய குடர்மாலையைச் சுற்றியபின் மாறுபாடு கெடக் கோபித்து ஆடும் அவன் கைக்கொண்ட வேலைத் திருப்பக் கறங்கர நின்றது துடி. எ.று. (9)