பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப் பிழிமகி முண்பார் பிறர். வெய் இ-ள். வீரராகிய போர்ப்பிரளயம் கைவளரின் அதனை விலக்கி வாளுடனே அங்கே தங்குவேனாக யாள்; நாடோறும் மிக்க உவகை யாற் சிறந்த வெற்றியினையும் வீரக்கழலினையும் உடைய யோளே, நீ கொடுப்ப நினைவு இயைந்து பிழியும் மதுவை நுகர் வாராக, வேறு சிலர், எ-று. உண்பாராக, பிறரெனத் தொழிற்படச் சொல்லுக; யான் வா ளொடுவைக, உண்பார் பிறர் என்றுமாம். 33. பிள்ளைப் பெயர்ச்சி போர்தாங்கிப் புள்விலங்கியோனைத் தார்வேந்தன் றலையளித்தன்று. (11) இ-ள். புள்ளைவிலக்கிப் பூசலைத்தாங்கினவனை மாலையினை உடைய மன்னன் தண்ணளி செய்தது. எ-று. வகூறு. பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா தணங்ஃஞர்செய் தாளெறித னோக்கி-வணங்காச் சிலையளித்த தோளாள் சினவிடலைக் கன்றே தலையளித்தான் றண்ணடையுந் தந்து. இ-ள். மாறுபடும் பூசலிடத்துக் காரி என்னும் புள் விலக்கவும் விலங்கானாய்ப் பகைவரை வருத்துத் துன்பத்தைச்செய்து வீரரை வெட்டுதலைப் பார்த்து வளையாத மலையினை ஒத்த தோளான் செற்றத்தினையுடைய வீரனுக்கு அற்றைநாளே வரிசைகொடுத் தான், மருதநிலம் பலவுங் கொடுத்து எ-று. (14)