பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கரந்தைப்படலம் 34 வேத்தியன் மலிபு தோள்வலிய வயவேந்தனை வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று, 25 இ.ள். தோளால்வலிய மறமன்னனை வாளால்வலிய வீரர் மேம்பாட்டினைச் சொல்லியது எ.று. வ-று. அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற் கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்-தங்கிச் செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும். வேல்வாய் இ-ள். உள்ளங்கை நெல்லிப்பழத்தினது தன்மையாதலால் தேன் மலருமாலையினை உடையான் கொற்றக்குடை நிழலின்கீழே அவதரித்துக் குற்றத்தினைக் கொடுக்கும் வாட்பூசலிலே புக்குப் பகைவர் தம் வேயின் வாயிலே உயிரைக்கொடுக்குஞ் செல்வம், மிகவும் உறுதியுடைத்து எ.று. வாழ்க்கை, நெல்லியதன்டயமாதலால் உறுதியுடைத்து என்க. (13) 35. குடி நிலை மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும் கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தனறு. இ-ள். மண்செறிந்த பூமியிடத்துப் பழமையும், தறுகண்மையும் உட்கொண்டு பிறர் அறியும் குடியின் வரலாற்றினைச் சொல்லியது. எ-று. மண்டிணிஞாலம்: மண்ணுலகு விண்ணுலகு என்றற் போலக் கொள்க,