பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வ-று. பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப் பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக் கற்றேன்றி மண்டோன்றாக் காலத்தே முற்றோன்றி மூத்த குடி. வாளோடு இ-ள். பொய்ம்மைநீங்க நாடோறும் கீர்த்தி உண்டாக்குதல். என்ன அதிசயமாம், பூமியைமறைத்த தெளித்துகறங்கும் உகாந்த வெள்ளம் விட்டு நீங்க, முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றத அளவிலே வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! எ-று. குடி புகழ்விளைத்தல் என்னவியப்பாம். எவன் என்பது என் எனக் குறைந்து நின்றது. மூத்தகுடி என்றது பூசலிலே வாளாலே பட்ட குடி என்பாருமுளர். (14) கரந்தைத்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டுப் பதின்மூன்றும் முடிந்தன. இரண்டாவது கரந்தைப்படலம் முற்றிற்று. மூன்றாவது வஞ்சிப்படலம் (சூத்திரம் 3) வாடா வஞ்சி வஞ்சி யரலம் கூடார்ப் பிணிக்குங் குடைநிலை வாணிலை கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை 5 பேராண் வஞ்சி மாராய வஞ்சி