பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3.வஞ்சிப்படலம் நெடுமொழி வஞ்சி முதுமொழி வஞ்சி உழபுல வஞ்சி மழபுல வஞ்சி கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே 27 ஒருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை 10 பெருவஞ் சிய்யே பெறுஞ்சோற்று நிலையொடு நல்லிசை வஞ்சியென நாட்டினர் தொகுத்த எஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும் வஞ்சியும் வஞ்சித் துறையு மாகும். என்-னீன், வஞ்சித்திணையும் துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ன், வஞ்சி, வஞ்சியரவம், குடைநிலை, வாணிலை, கொற் றவை நிலை கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழிவஞ்சி, உழபுலவஞ்சி, மழபுல வஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறை வஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்று,நிலை, நல்லிசைவஞ்சி என இவை இருபத்தொன்றும் வஞ்சித்திணையும் துறையும். ஆம் எ.று. 36 வஞ்சி வாடாவஞ்சி தலைமலைந்து கூடார்மண் கொளல்குறித்தன்று. இ-ள். தோலாத வஞ்சியைத் தலையிலே குடிப் பகைவர் பூமி யைக் கொள்கையைக் கருதியது. எ-று. செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர் வெங்கண் மகிழ்ந்து விழவமர-அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தானெங் கோ.