பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 வஞ்சிப்படலம் 29 இ-ள். தன்மேவிட்டமாலையிலே வண்டுகள் ஒலிப்ப மிக்க அறி வினையுடையோர் கீர்த்தியைச் சொல்லக் கத்தரிகையால் மட்டஞ் செய்த மாலையினையுடைய வேந்தன் குடையைப் புறவீடு விட்டது எ - று. று. முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றனைத் துன்னருந் துப்பிற் றொழுதெழாமன்னர் உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடைநா ளிறைவன் கொள. இ-ள். தன்முன்னே வீரமுரசு முழங்க, பெரிய கடல்போன்ற சேனையினையும் கிட்டுதற்கரிய வலியினையும் உடையராய்ப் பணித் தெழாத வேந்தர் தம்முடைய வாணாள் கெட்டன; திரைமிகுந்த கடலை வேலியாகவுடைய பூமியிடத்து, குடையை அரசன் புறவீடுவிட எ-று புறவீடு விட உடை நாளுலந்தனவென்க. ஆல் : அசை. (3) 39. வாணிலை செற்றார்மேற் செலவமது கொற்றவா ணாட்கொண்டன்று இ-ள். பகைவர்மேல் எடுத்துவிடுதலை விரும்பிய வெற்றியிளை உடைய வாளைப் புறவீடு விட்டது எ-று. வ -று. அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னன் எறிந்தில கொள்வா ளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நன்பகலுங் கூகை நகும். இ-ள். சோதிடநூல் வல்லவர் தெரிந்தநாளிலே வட்டக் காலால் சிறந்த தேரினையுடைய வேந்தன் வெட்டிவிளங்கும்