பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். நெருப்புப் பொருந்திய பகைவர் நாட்டு அம்பலத்து நொந்து அழியாநின்றவர் நின்னை நிழலாகச் சேர்ந்தேம் என்று புகழ்ந்து சீபாதத்தை வந்துசேரச் சினத்தைப் பாரர்ட்டிக் கோபித்து வந்தார் பட்டுத் தம்பெயர் கெட வெற்றியைப் பெற்று வேலை வலமாக உயர்த்தான், வேந்து எ-று. 43. கொற்றவள்ளை மன்னவன் புகழ்கிளந் தொன்னார்நா டழிபிரங்கின்று. (7) இ-ள். அரசன் கீர்த்தியைச் சொல்லிப் பகைவர்தேசம் கெடு வதற்கு வருந்தியது எ-று. வ - று. தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப் பரிய விளிவதுகொல்யாழாய்ப் புடைத்தே னிமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு. இ-ள். ஆரந்தாழ்ந்த மார்பினை உடையவன் தாமரை மலர் போன்ற கண்கள் சிவந்தன, பாழாய்க் கண்டார் இரங்கக் கெடும் போலும்; யாழை ஒப்ப முரன்று பக்கத்திலே வண்டுகள் ஆர்க்கும் மாலையினையும் பொலிவினையுடைய கண்ணினையும் உடைய மைந்தர் சிறுதேர் ஒசை ஆரவாரிக்கும் நாடு எ-று. தாடு பாழாய்ப் பரிய விளிலதுகொல் என்க. 44. பேராண் வஞ்சி கேளல்லார் முனைகெடுத்த மீளியார்க்கு மிகவுய்த்தன்று. (8) இ-ள். உறவல்லாதார் பெருஞ்செருவைத் தொலைத்த தலைமை யையுடைய வீரர்க்குப் பெரிதுங் கொடுத்தது எ-று.