பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ன், பொருந்தாதாருடைய நல்ல தேசத்தை மிக்க நெருப்பைக் கொளுத்தியது எ-று. வ- - று. அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி மயிலன்னார் மன்றம் படரக் – குயிலகவ ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார் நாட் டோடெரியுள் வைகின வூர். இ-ள். வேலை ஒத்த விழியைப்புதைத்துப் பயப்பட்டுக் கூப் பிட்டு மயிலை ஒத்த குலமகளிர் மன்றென்று பாராதேசெல்ல குயில்பாட, ஆளுலாவச் சுரும்பு ஒலிக்கும் தலைமையினையுடைய பகைவர் தேசத்து ஊர்கள் பரந்தோடும் நெருப்பினுள்ளே அவதரீத் தன எ-று. 50. மழபுல வஞ்சி கூடார்முனை கொள்ளைசாற்றி வீடறக்கவர்ந்த விளைமொழிந்தன்று. (14) இ-ள். பகைவர் வேற்றுப்புலத்தைக் கொள்ளையூட்டி அகங்கள் பாழ்படக் கொன்னைகொண்ட தொழிலைச் சொல்லியது எ-று. வறு. களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன் வனமனை பாழாக வாரிக் - கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு. இ-ன் அடியாரையும் ஒளிவிடும் வயிர அரதனங்களையும் முத்து அரதனத்தினையும் சிவந்த பொன்னினையும் அழகிய அகங்களெல்லாம் வறியவாகத் திரட்டிக் கைப்பற்றிக்கொள்ளும் வகைமிக்குக் கண்ணுக்கு நிறைந்த வில்லாளர் கொள்ளை கொண்டார்; வீரக்கழலினை உடைய அரசன் தன் பகைவர் சுற்றம் இரங்க அவருடைய நாட்டை எ-று. நாடு கண்ணார் சிலையார் கவர்ந்தார் என்க. (15)