பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 51. கொடை வஞ்சி நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப் பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று. 37 இ-ள். உச்சமாகவும் மத்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையை அனந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக்கொடுத்தது. எ-று. செந்தூக்கு முதலான எழுவகைத் தூக்கினாலும் தூக்கியென்று மாம், ஈண்டு நிவப்ப என்றது மந்தத்திலே ஓங்கியசமத்தை; '"ஒரு சீர் செந்தூக் கிருசீர் மதலை. மூச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் வெப்பே மறுசீர் கழாஅல், எழுசீர் தாளெடுத் தூக்கிகள மொழிப என்றாராகலின், வ - று. சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி றெற்றி மடவா ரிரிந்தோட - முற்றிக் குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம் பரிசின் முகந்தன பாண். இ-ள். சூழ்ந்த பெருங்கிளை ஒக்கக் கலங்கித் தத்தம் வயிற்றிலே அடித்துக்கொண்டு மகளிர் கெட்டோடப் பகைவர் நாட்டை வளைத்துத் தலைவன் சத்துருக்களைப் பறித்துக்கொண்ட பொருள் முழுதும் தாம் பெறும் பேறாக முகந்துகொண்டன பாண்கிளை எ-று. 52. குறுவஞ்சி மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக் கொடுத்தளித்துக் குடியோம்பின்று. (16) இ-ள், மண்டி எதிர்ந்த வீரத்தை, உடைய மன்னர்க்குத் திறையைக் கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத தண்ணளி பண்ணிக் காத்தது எ-று.