பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 வ- று. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் வாட்டானை வெள்ளம் வரவஞ்சி - மீட்டான் மலையா மறமன்னன் மால்வரையே போலும் கொலையானை பாய்மாக் கொடுத்து. இ-ள். தாளிலே தாழ நீண்ட பெரியகையினையும் ஒப்பில்லாத மதியினையொத்த கொற்றக்குடையினையும் உடையான் வானினை யுடைய சேனை வெள்ளம் தங்கள் நாட்டில் வருதற்கு அஞ்சி விலக்கினான்; எதிர்க்க மாட்டாத மாற்சரியத்தினையுடைய வேந்தன் பெரியமலையினை யொக்கும் கொலையானையினையும் சதிபாயும் குதிரை யினையும் கொடுத்து எ-று. கொடுத்து மீட்டான் என்க. 53. இதுவுமது கட்டூரது வகைகூறினும் அத்துறைக் குரித்தாகும். (17) இ-ள். விட்டிருக்கும் பாசறையினது கூறுபாட்டைச் சொல்லி னும் முற்பட்ட குறுவஞ்சிக்கு உரிமை உடைத்து எ-று. வ - று. அவிழ்மலர்க் கோதைய ராட வொருபால் இமிழ்முழவம் யாழோ டியம்பக் - கவிழ்மணிய காய்கடா யானை யொருபாற் களித்ததிரும் ஆய்கழலான் கட்டு ரகத்து. இ-ள். மலர்ந்த பூவாற்சிறந்த மாலையினையுடைய மகளிர் கூத்தாட ஒரு பக்கத்திலே முழங்காநின்ற முழவம் யாழுடனே ஆர வாரிப்பப் பக்கத்திலே கவிழ்ந்தமணியினையுடைய சீறுகின்ற மதத் தினையுடைய யானை ஒருபால் மகிழ்ந்து முழங்கும், மேலாக நல்லோர்தெரிந்த வீரக் கழலினை உடையான் விட்டிருந்த பாசறை யிடத்து எ-று. (18)