பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 54. ஒருதனிநிலை பொருபடையுட் கற்சிறைபோன் றொருவன்றாங்கிய நிலையுரைத்தன்று. 39 இ-ள். போரினைச்செய்யும் சேனையிடத்து வெள்ளம் தள்ளாத படி கல்லாற்கட்டின கரையேபோலப் பெரும்படையை ஒருவீரன் தடுத்த நிலையைச் சொல்லியது எ-று. வ-று. வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற வாடன் முதியாள் வயிற்றிடம் - கூடார் பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா இரும்புலி சேர்ந்த விடம். இன். முத்தியினை அறிந்து எல்லாப் பற்றும் அற்குேர்க்கும் அற்புதமாம், இவ்விடத்து நின்ற பொலிவு அழிந்த தன்மையை உடைய கிழவிதன் மடியகம்; பகைவர் அளவிறந்த சேனை நெருக்கி வந்து மேலீடவும் நின்ற நிலையினின்று நீங்காத வெளிய புலியனை யான் கிடந்த இடம் எ-று. ஆல் ; அசை ; ஒரு சொல்விழுக்காடாயினும் ஆம், (19) 55. தழிஞ்சி அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று. இ-ள். ஒருவீரன் தனக்குக் கெட்டு ஓடுவார் முதுகுபுறத்துக் கூரிய வாள் ஓச்சாத மிக்க மறப்பண்பை விரும்பிச்சொல்லியது எ-று. வ-று. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும் தான்படை தீண்டாத் தறுகண்ணன் -வான் படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் போக்குமோ வெஃகு.