பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ன். காட்டிலே தோற்றின நெருப்புப்போலப் பகைவர் தன்னை மீதூர்த்துவந்தாலும் ஆயுதம் தொடாத மறவன்றான், பகைவர் சுவர்க்க லோகத்தே போதலைக்கருதி எதிரின் அல்லது அவ்வெகுண்டோர் முதுகிடுதல் கருதிய பின்பு ஓக்குனோ வாளினை ? எ-று. (20 56. பாசறை நிலை மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந் தன்று. இ-ள். நிறைமதிபோன்ற கொற்றக்குடையின் கீழே தாழ்வு சொல்லி வேந்தர்பலரும் மாற்சரியத்தை வீடவும் அவ்விடத்தினின் றும் போகானாகி மறத்தினையுடைய மன்னன் பாடிவீட்டிலே இருந்தது எ-று. வ -று. கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய்திறந்த பின்னும் - கரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பதைமெலியப் பாசறையு ளான். இ-ள். கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் முழங்கு நெருப பிளை உண்ணப்பண்ணுளித்துப் பெரிய நீர்நிலைகள் பலவும் உடைத் தபின்னும் வண்டில் கூட்டமிக்க குனிர்த்தசெங்கழுநீரின் தூய்தான பூவாற செய்த மாலையிளை உடையோன் சத்துருக்கள் பொலிவழிய விட்ட படை வீட்டிலே இருந்தான் எ-று. 57. பெருவஞ்சி முன்னடையார் வளநாட்டைப் பின்னருடன் றெரிகொளீ இயன்று (21) இ-ன். தன்னுடைய முன்னே வந்து செறியாதார் நல்ல தேசத்தைப் பின்பும் கோபித்து நெருப்பைக் கொளுத்தியது எ-று