பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள், சத்துருக்கள் வேற்றுப்புலம் அழியவிட்ட வென்றி வேலினை உடையவன் வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ-று. வறு. மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங் கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் செல்லப் பெருகுஞ் சினம், இ-ள். சிங்கம்போல் கோபித்து மாறுபட்டு எதிர்ந்தார் நிலத்தின் மேல் வெளிதூரப் படையெடுத்துப் போய்விட்டபின்பும் அசைந்து எரியும் நெருப்புப்போலச் சயிக்க வளரும் சேனையினை உடைய அரசனுக்குப் பகைமன்னர்மேல் எடுத்துச்செல்ல மிகா நிற்கும் கோபம் எ - று. வென்றேச் விளக்கங் கூறியது, 60. இதுவுமது இறுத்தபி னழிபிரங்கல் மறுத்துரைப்பினு மத்துறையாகும் (24) எடுத்துவிட்டபின்பு பகைவர் தேசத்துக் கேட்டிற்கு இரங்கலை அழித்துச் சொல்லிலும் முன்பு சொன்ன துறையே ஆம் எ - று. வ - று. குரையழன் மண்டிய கோடுயர் மாடம் சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுழ்ந்த-நிரை திண்டேர்ப் பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென் நல்லிசை கொண்டடையார் நாடு. நிறுப்ப இ-ள். ஆரவாரம் உடைய நெருப்புக் கொளுத்தின மலையை ஒப்ப ஓங்கின மாளிகை எல்லரம் பேய்ச்சுரையும் பேய்ப்பீர்க்கும்