பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

முன்னுரை

 உலகில் மக்களாற் பேசப்படுகின்ற மொழிகள் பல்லாயிரக் கணக்கானவை, இவைகளில் சிலவாயிர மொழிகள் எழுத்துக்களைப் பெற்றவையல்ல. மற்ற எழுத்தும் இலக்கியமும் பெற்ற மொழிகளுள்ளே மிகவும் தொன்மை வாய்ந்த மொழிகள் விரல் விட்டெண்ணக்கூடியவளவினவே, அச்சிலவற்றுள் இன்று பேச்சுவழக்கற்றவை பல. இன்னும்சில காலப்போக்கில் இன்று அம்மொழி பேசுவோரால் புரிந்துகொள்ள வியாலாத வளவிற்கு உருமாறிப் போயுள்ளன. இன்று வடமொழி படித்தவர்களால் வேதத்தைப் புரிந்து கொள்ள முடியாது. சாஸர் காலத்து ஆங்கிலம் இன்றைய ஆங்கில அறிவைப் பெற்றவர்களால் பொருள் விளங்கிக் கொள்ள முடியாதவொன்று. ஆனால் தமிழ் மொழியோ இரண்டாயிரமாண்டிற்கு முன்னெழுந்த இலக்கியத்தை இன்றையத் தமிழன் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடிய நிலையிற் சிறப்புடையதாகத் திகழ்கின்றது.
 இத்தகைய சிறப்பிற்குக் காரணம் தமிழ் மொழியிலுள்ள இலக்கணங்களேயாகும். பழமையான இலக்கணம் தொல்காப்பியமாகும். எழுத்து, சொல்லிலக்கணங்கள் அப்பெயர்களையுடைய இரண்டதிகாரங்களில்விளக்கமுறுகின்றன. இந்நூல் பொருளதிகாரம், பொருள், யாப்பு, அணி ஆகிய மூன்றன் இலக்கணத்தைச் சொல்கிறது. காலப்போக்கில் தமிழ் வளர்ந்த பொழுது அவ்வளர்ச்சிக்கேற்ப மேற்சொன்ன மூன்றனுக்கும் தனித்தனி இலக்கண நூற்கள் தோன்றலாயின. பொருளில் அகப்பொருளிற்கும் புறப்பொருளிற்கும் வேறு வேறிலக்கணங்கள் எழுந்தன.
 தொல்காப்பியத்தில் புறத்திணையியல் புறப்பொருளிலக்கணத்தைச் சொல்கிறது. இதற்குப்பின் அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவராற் பன்னிருபடலம் என்ற நூலியற்றப் பெற்றது. வெட்சி முதலிய பன்னிருதிணைகளையும் ஒரு திணையைப்பற்றி யொருவர் என்ற முறையில் இப்பன்னிரு அறிஞர்களும் நூற்பாயாத்