பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 62. காஞ்சியதிர்வு மேல்வரும் படைவரன் மிகவு மாற்ற வேல்வ லாடவன் விறன்மிகுத் தன்று. . 45 இ-ள். எதிரூன்றும் சேனை மேவிடுதலைப் பொருத வேல் தொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ-று. வ-று. மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பில் வென்வேன் முகந்த புண் வெய்துயிர்ப்பத் தன்வேல் பிடிக்கலு மாற்றாப் பெருந்தகை யேவத் துடிக்கண் புலையன் றொடும். என்று இ-ள். மாற்றரசன் தன்மேலே மீதூர்ந்து வரும் பாரானாகி அகன்ற மார்பிடத்து வென்றி வேல் பாய்ந்து முதுகு புறத்து உருவிய புண் வெய்தாக உயிர்ப்பத் தன்னுடைய வேலைக் கையாற் பிடிக்கவுமாட்டாத பெரிய மேம்பாட்டினை உடையவன் சொல்லத் துடியின் கண்ணைப் புலையன் கொட்டாநிற்கும் எ-று. 63. தழிஞ்சி பரந்தெழுதரு படைத்தானை வரம்பிகவாமைச் சுரங்காத்தன்று. • இ-ன், கைவளர்ந்து நடவாநின்ற ஆயுதத்தையுடைய சேனை தங்கள் எல்லையிற் புகுதாபடி அருமை உடைத்தான வழியிடத்தைக் காத்தது எ-று. வ-று. குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி உலாவு முழப்பொழிக வேந்தன்-கலாவும் இனவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல் புனவேய் நரலும் புழை.