பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். ஏறிட்ட வில்லினையுடைய காஞ்சியார்தம் அரணினைக் கைக்கொள்ளவேண்டி இயங்கு முயற்சியை ஒழிவானாக எதிர் மன்னன்; தம்மிற் கலக்கும் இனத்தால் உயர்ந்த புலியை ஒத்த மாற்சரியத்தை விரும்புவோர் காக்குமிடம் புனத்தின் மூங்கில் ஆர்க்கும் நூழை எ-று. இதல் வெய்யோர் எனப் பிறர்போற் கூறினார். வஞ்சித் தழிஞ்சி இவ்வாறன்று. 64. படைவழக்கு முத்தவிர்பூண் மறவேந்தன் ஒத்தவர்க்குப் படைவழங்கின்று. (3) இ-ள், முத்து விளங்கும் ஆபரணத்தையுடைய சினமன்னன் தம்மில் இளம் ஒத்தவருக்கு ஆயுதத்தைக் கொடுத்தது எ-று. வ-று. ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப ஐயிலை யெஃக மவைபலவும் - மொய்யிடை ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித் வாட்குடி வன்க ணவர்க்கு. தான் இ-ள். ஐயப்பாட்டை ஒழித்துக் கொலைத்தொழிலையுடைய வெய்ய காலன் உணவுபெற்றேன் என்று ஆர்த்துக்கொள்ள வியக்கத்தக்க இலைத் தொழிலால் மிக்க வேல் பலவற்றையும் பூசலிடத்து ஆளைக் கடியும் போர் வெல்லும் யானையினையுடைய தலைவன் வழங்கித் தலை யளி செய்தான் மறக்குடியில் தறுகணவர்க்கு எ-று. 65. இதுவுமது கொடுத்தபின்னர்க் கழன்மறவர் எடுத்துரைப்பினு மத்துறையாகும். (4)