பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 47 இ-ள். அரசன் படைவழங்கின பின்னர்க் கழல்வீரர் உயர்த் துச் சொல்லினும் முன்புசொன்ன துறையேயாம் எ-று. வ-று. துன்னருந் துப்பிற் றெடுகழலார் சூழ்ந் தன்னம ரொள்வாளென் கைதந்தான்- திருப்பத் மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து, இ-ள். கிட்டுதற்கரிய வலியிளையும் கட்டிய வீரக்கழலினையும் உடையார் தன்னைச் சுற்றியிருப்பத் தளக்கு மேவும் ஒள்ளியவாளை என்கையிலே தந்தான் ; அரசற்குப் பூமியிடயோ தங்காநின்றது. முத்த மாலை யணிந்த கொற்றக்குடைக்கீழ்; சுவர்க்கலோகத்தையும் விரும்புங்கொல் அரசன் எ - று. இஃது "ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்பத னானாம். "ஏந்திய கொள்கையார் சீறி னிடை முரிந்து, வேந்தனும் வேந்து கெடும்' என்பதனால், வேந்து இராச்சியம் என்றுமாம். இனி, வேற்று மன்ளர்க்கு மண்ணகமோ வைகுதல் இல்லை; வரை விண்ணகத்தின்கண் ஏற்றலையும் அரசன் வேண்டுங்கொல் என்று மாம் இப்பொருட்கு மன்னர்க்கு என்பது பாடம். 66. பெருங்காஞ்சி தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல் வீங்குபெரும் படையின் வெளிப்படுத்தன்று. இ-ள். எதிர்வரும் படையிளைத் தடுக்கும் வலியினையுடைய கொடுவிளையாளர் தத்தம் வலியை மிக்க பெருஞ்சேனையிடத்துத் தோற்றுவித்தது எ - று. வ-று. வில்லார் குறும்பிடை வேறுவே றர்த்தெழுந்த கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா