பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லாம் இருவி வரைபோன்ற வின்று. இ-ன். விற்படை நிறைந்த அரணிடத்துப் பலவகையாக அரவா ரித்து வந்த இயற்கையான மறத்தினைஉடையாருடைய அம்புமழை யைப் பொருவாய் வெருண்டு சினமன்னர் போரைவெல்லும் யானை பலவும், தினை அரிந்த தாளினையுடைய மலையைஒத்தன, இந்தாள் எ-று. (6) 67. வாள்செலவு அருமுனையா னறைகூ. வினபின் செருமுனைமேல் வாள்சென்றன்று. இ-ள். வெல்லுதற்கு அரிய போரையுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்தபின்பு பொருபடையிடத்து வாள்போனது எ-று. வ-று, உணங்கு புலவறா வொன்னார் குரம்பை நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய குந்த மலியும் புரவியான் கூடாதார். வந்தபின் செல்கென்றான் வாள். இ-ள். உலரும் புவால்நாற்றம் ஒழியாத பகைவர் பாசறைக் கைநிலை செறிந்த பீணக்கத்தையுடைய கானத்திடத்து வெய்ய பகையைப் பார்த்துப் பகைவரை வருத்திய வேலிட்டுப் பண்ணு தல் மிக்க குதிரையினையுடைய அரசன் சத்துருக்கள்: பொர அடர்ந்த பின்பு வாளினைச் செல்க என்று ஏவினான் எ-று. 68.குடைசெலவு முதுகுடி மறவர் முன்னுறச் சூழக் கொதியழல் வேலோன் குடைசென் றன்று. இ-ள். பழங்குடிக் கொடுவினையாளர் முன்னே சூழ்ந்துபோக அழலும் நெருப்புப்போன்ற வேலினை உடையவன் குடையைப் புறவீடு விடுத்தது எ-று. வ-று. தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தாளை வெம்முனை வெற்றி விறல்வெய்யோன்-தம்முனை