பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஞ்சிப்படலம் 49 நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல் கென்று கூட்டிநாட் கொண்டான் குடை. இ-ள். பகைப்புலங்கெட, வெற்றியிகுந்த தேராற்சிறந்த சேனை யினையும் வெய்ய பூசல்வெற்றியினையும் உடைய கொற்றத்தை விரும்பியோன் இருபெருவேந்தர்தாம் பொரும்பூசலை இன்ன நாள் என்று நிச்சயித்துக் கட்டித் தன் இலாஞ்சனையிட்டுப் பகைவர்மேற் போகானச் சொல்லிச் சோதிடவருடனேகூட்டி நல்லநாளிலே குடையைப் புறவீடு வீட்டான் எ-று. 69. வஞ்சினக் காஞ்சி வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று, இ-ள். வெய்ய கோபத்தையுடைய மன்னவன் பகைவரைத் தாழப் பண்ணுவான் வேண்டி இவ்வாறு செய்வேன் எனச் சொல்லிய கூறுபாட்டைச் சொல்லியது எ - று. வ - று. இன்று பகலோ னிறவாமு னொன்னாரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - . என்றும் அரணவியப் பாயு மடையார்மு னிற்பேன் முரணவிய முன்முன் மொழிந்து. இ-ள். இற்றைதாள் ஆதித்தன் படுவதன்முன் பகைவரை வெற்றியைச் செய்து போர்க்களத்தைக்கொள்ளாத வேலை எடுப்பே னாயின் எந்நாளும் யான் இருந்த அரண்கெடத் தாக்கும் பகைவர் முன்னே நிற்பேனாவேன் மாறுபாடுகெட முன்னே முன்னே தாழ வார்த்தைகளைச் சொல்லி எ-று. 70. பூக்கோணிலை காரெதிரிய கடற்றானை போரெதிரிய பூக்கொண்டன்று. (9)