பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஞ்சிப்படலம் £6 இ-ள். கொலைத் தொழில் செய்து வெகுண்ட கூரியவேலினை உடையவளைக் கிட்டி மிக்க இருளின்கண்ணே நின்று கோ பித்துப் பார்த்து அழலைக் கான்று அணுகப்போய் ஒரு பேய் மகள் பகைவர் ஆயுதம் பினந்த தீராத புண்ணைத் தாங்கிள மார்பிளைத்தீண்டி னாள். உறக்கம் மிக எ-று. உறக்கம் மிகுதல் - உயிர்போதல். 79. தொடக் காஞ்சி அடலஞ்சா நெடுந்தகைபுண் தொடலஞ்சித் துடித்து நீங்கின்று. (18) இ-ள். கொலை அஞ்சாத பெரிய நிலையினை உடையவன் புண்ணினைத் தீண்டுதற்குப் பயப்பட்டு நடுங்கிப் பேய் பெயர்ந்தது எ-று. வறு. ஐயவி சிந்தி தறைபுகைத் தாய்மலர் தூய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி- மொய்யிணர்ப் பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண் யாங்காப்பப் பேய்ப்பெண் பெயரும் வரும். இ-ன், வெண்சிறுகடுகினைத்தூவிக் குங்கிலியம் முதலான நறுநாற்றத்தைப் புகைத்துத் தெரிந்த பூவினைச்சிதறிப் பறியாக் குறிஞ்சிப்பண் பலவும் பாடிச் செறிந்த தொத்தினையுடைய மலரிம் டுத் தொடுத்த மாலையால் நிறைந்த பெரிய மேம்பாட்டினையுடை யவ்ன் புண்ணை யாங்கள் பரிகரிப்பப் பேய்மகள் நீங்கும், அணுகும் எ-று. கொய்யரக்குறிஞ்சி : வெளிப்படை. 80. மன்னைக் காஞ்சி வியலிடமருள விண்படர்ந்தோன் இயல்பேத்தி யழிபிரங்கின்று. (19)