பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். அகன்ற பூமியில் உள்ளார் மயங்க வீரசுவர்க்கத்தே சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது எ - று. வ-று போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோகுயிர்மன் - யார்க்கும் அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல் நிறந்திறந்த நீளிலை வேல். இ -ன் பூசலுக்குத் தெப்பம் அனையவன், உயர்ந்தோர்க்குத் தாணு ஒப்பானவன், தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை அளையவன். யாவர்க்கும் தருமம் தோன்றின வாயிலை அடைத்தது; தலைவன் மருமத்தை வெளிசெய்த நீண்ட இலைத்தொழிலால் சிறந்த வேல் எ-று. 81, கட்காஞ்சி நறமலியு நறுந்தாரோன் மறமைந்தர்க்கு மட்டீந்தன்று. (20) -ள். மதுமிகும் கமழுமாலையோன் தறுகணாளர்க்கு மது வைக் கொடுத்தது எ-று. வ -று ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள் விடலைக்கு வெங்கள் விடும். இ-ள். பொறாத பகைவர்க்கு இனி ஒழிவதாக உறக்கம் வேந்தன், கொடுவினையாளர் மதுவை உண்டு களித்தாடுவதற்கு முன்னே தழைக்கற்றையாள் வேய்ந்த குடிவிடத்துப் புன்கட்கிழவி பெற்ற வீரனுக்கு வெவ்விதமான மதுவை விடா நின்றாள் எ-று. (21) 82. ஆஞ்சிக் காஞ்சி காதற் காணவனொடு கனையெரி மூழ்கும் மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று. இ - ன். அன்பினையுடைய தன் கொழுநனோடு செறிந்த நெருப்பிலே அழுந்தும் காதலையுடைய மெத்தென்ற தன்மையாற் சிறந்த அவள் தன் மிகுதியைச் சொல்லியது ஈ-று.