பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஞ்சிப்படலம் வ - று. தாங்கிய கேளொடு தானு மெரிபுகப் பூங்குழை யாயம் புலர்கென்னும் - நீங்கா விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப் புலாழித் தலைக்கொண்ட புண். 67 இ- ன். தரித்த கணவனோடு தானும் நெருப்பிலேபுகுவான் வேண்டிப் பொலிந்த மகரக்குழையை உடையவள் தோழிமாரை அகலப்போமின் என்று சொல்லும்; ஒழியாத வாய்நுரையினை உடைய குதிரையால் சிறந்த சேனைப்பகைவர் சீறூரிடத்துப் புலால் நாற்றத்தினையுடைய சக்கரத்தாலே எறியப்பட்ட புண்ணை எ-று. புண்ணைத் தாங்கிய கேளொடு எனக்கூட்டுக. புலவென்பதனுள் அகரம் தொக்கது; ஒற்று இரட்டாமையுமறிக. (22) 83. இதுவுமது மன்னுயிர் நீத்த வேலின் மனையோன் இன்னுயிர் நீப்பினு மத்துறை யாகும். இ-ன் தலைவன் உயிரினை நீக்கின அயிலாலே மனைக்கிழத்தி இனிய ஆவியை ஒழிப்பினும் முன்சொன்ன துறையேயாம் எ.று வ - று. கவ்வை நீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் அம்பிற் பிறழுந் தடங்கணவன்காதற்[அவ்வேலே கொம்பிற்கு மாயிற்றே கூற்று. இ-ள். ஆரவாரத்தான் மிக்க கடல்சூழ்ந்த நிலத்திற் கொடிதே காண், ஒருமையுடைமை: வெய்தான அயில்வாயிலே பட்டாள் வெற்றியை விரும்பினோன்; அந்த அயிலே பகழிபோல மிளிரும் பெரிய விழியை உடையவளான அவன் அன்பினையுடைய வஞ்சிக் கொம்பளையாளுக்கும் கூற்றயிற்று எ - று, (23)