பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நொச்சிப்படலம் 63 இ-ள். தெளிவுடைத்தான கட்டுங்கழலோன் அழகிய மதிலின் கண் கேட்டினைச் சொல்லியது எ - று. வ-று. அகத்தன வார்கழ னோன்றா ளரணின் புறத்தன போரெழிற் றிண்டோள் - உறத்தழீ இத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான். இ-ள். அரணினுள்ளே வீழ்ந்தன, கட்டுங் கழலாற் பொலிந்த வலிய கால்: மதிலின் புறம்பே வீழ்ந்தன, பூசலைச்செய்யும் அழகிய திண்ணியதோள்; இறுக அணைத்துத் தோட்கு உரியரான இணைவை யினையுடைய தெய்வமகளிர் கொண்டாட வாளினையுடைய உபகாரி விண்ணிடத்தான் எ-று. 93. அழிபடை தாங்கள் இழுபுடன் றிகல்பெருக அழிபடை யரண்கரத்தன்று. -ள். தம் படைத்தாழ்விற்குக் கோபித்துமாறுபாடு மிகக் கெட்ட சேனை எயிலைக் காத்தது எ-று. வ - று. பரிசை பலகடந்து பற்ற ரெதிர்ந்தார் எரிசெ யிகலரணங் கொண்மார் '- புரிசை அகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி மிகத்தடிந்தார் மேனின் றவர். இ-, கிடுகுபடை பலவற்றையும் வென்று பகையான உழிஞை யார் எதிர்ந்தாராக அழலினைப்பண்ணும் மாறுபாட்டுக்குறும்பினைக் கொள்வான் மதிவினுட் காலிடாதபடி அழகிய ஒளியையுடைய வாளை ஓச்சிப் பிணம்பெருகத் துணித்தார், மதின்மேல் நின்றவீரர் எ-று. 94. மகண்மறுத்து மொழிதல் வெம்முரணான் மகள்வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத்தன்று. (8)