பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


&ytr• # • jrfr &? கொண்டுபோய்-முகர்ந்து سسا سنة نة அல்ல-வெறுமென மூக்கண்டை கொண்டு போய், பதஞ் சொல்லிச் சரிப்படுத்து வான். மெய்யாகவே அவன் கையில் ஜாலமிருந்தது. அவன் ஒரு சாமானைப் பக்குவம் பண்ணின பிறகு, அதைச் சமைத்தவனே பிரமிக்கும்படி, அதன் மதுரம் அதிகரித் திருக்கும். "ஆனால் கோபம் வந்தால் பேய்க்கு வருவது போல் தான்! “ஒரு சமயம் ஒரு உத்தியோகஸ்தன் வீட்டுக்கு வேலைக்குப் போயிருந்தோம். ஏதோ அவனுக்குச் சம்பள மும் வேலையும் உயர்ந்ததற்காக, நண்பர்களுக்கு விருந்தாம். 'அடுப்பு மிகவும் புகைந்தது என்று அதில் சட்டென ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றியதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கேரே வந்து, சுழற்றி என்னைக் கன்னத்தில் விட்ட அறையின் வேகத்தில் தொலை தூரத் தில் தொப்' பென்று விழுந்தேன். அறையின் கனம் என் மேல் ஒரு வண்டி செங்கல் சரிந்தாற்போலிருந்தது. 1 யார் வீட்டு சொத்துப் பேச்சுன்னு பண்ணறே? அடுப்பு எரிய விட மானாம், விடறான்-மடையன்' 'பின்னாலிருந்து களுக்கென்று சிரிப்பு ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரரின் பெண் கின்று கொண்டிருந்தாள். இரட்டைப் பின்னல், உள்பாவாடை தெரியச் சல்லாப் புடவை, தனி மேலாக்கு, ஸ்னோ, பவுடர், நாகரிகத்தின் மற்றச் சின்னங்களுடன் 'மனிதன் அழிவதற்குக்கூட அவ்வளவு பயப்பட வில்லை. அவமானப் படத்தான் அஞ்சுகிறான், அதுவும் பெண்ணெதிரில், அவமானத்திலும் அடி மயக்கத்திலும் தண்