பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ه آi f = ۶یه ۰ ) رامه ஆண்களுக்கு இழைக்க முடியாது. கடைசியில் அது தங்க ளுக்கே இழைத்துக் கொள்ளும் தீங்காய்த்தான் முடிகிறது. நீ என்னுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணை யில்லை. ஆனால், என்னைக் கருவியாய் உபயோகப்படுத்த நான் சம்மதியேன். என்னுள் ஏதோ ஒன்று அம்மாதிரி உடன்பட மறுக்கிறது. என் இயல்பிலேயே அது இல்லை. நானாக அழிந்தாலும் அழிவேனே தவிர, என்னைப் பிறர் அழிக்கவிடேன். எனக்கும், நீங்களெல்லாம் இல்லாத வேளையிலும் இருக்கும் வேளையிலும் கூப்பிடும் தெய் வத்துக்கும்கூட இதேதான் தகராறு! நாம் எல்லாம் தெய் வத்தின் கருவிகள் என்கிறார்கள். அதுதான் எனக்கு ஒப்ப மாட்டேன் என்கிறது. தெய்வமேயானாலும் சரி, நல்ல தற்கேயானாலும் சரி, அதுகூட என்னைக் கருவியாக்க என் மனம் இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நான் அதன் வழிக்குப்போகவில்லை; அதுவும் என் வழிக்கு வர வேண்டாம் எனபதுதான் என் சித்தாந்தம்.

  • வாழ்க்கையே விளையாட்டு’ என்று எந்தச் சினிமா சம்பாஷணையையோ என்னிடம் உபயோ கி த் தாய் அல்லவா? சரி, இந்த விளையாட்டை இப்பொழுது கேள். " உன் நகைகள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. டிக்கட்டுகளும் என்னிடமிருக்கின்றன! உன்னிடம் உன் அரைப்புடைவையைத் தவிர வேறு எதுவும் நான் வைக்கப்போவதில்லை. நீ திரும்பி வீடுதான் போய்ச் சேருவாயோ, எங்கே தான் போவாயோ, எப்படித் தான் போவாயோ, அதில்தான் விளையாட்டு இருக்கிறது: இந்த விளையாட்டு உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் இதிலிருந்து ஒன்று தானே தெரிந்துகொள்வாய்; எந்தப் பொம்மையையும் அநாவசியமாய் உடைத்துப் பார்க் காதே. தவிட்டுப் பொம்மை என்று கினைத்துக் கொண்

பா-?