பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14s, அபிராமீ வெள்ளித் தாம்பாளத்தில் திருமாங்கல்யமும், கூரைப் புடவையும் ஆசிக்காக சபையோரைச் சுற்றி வருகின்றன. கலியாணக் கூடத்தில் ஒரமாக ஜமக்காளம் விரித்து, அதில் பெஸல் நாயனமும், தவிலும் வெளுத்து வாங்குகின்றன. வாசல் திண்ணையில் பாண்டு. அதைச் சுற்றித்தான் கூட்டம். கிராமத்தில் பின் என்ன ஸங்கீதமா கேட்கப் போகிறார்கள்? இந்தமாதிரி சமயங்களில் சங்கீதம் ஏது? அதுதான் முதல் பலி. யார் கோஷ்டம் கூட? போட்டியும் குஷியும் அதில்தான். காயுடுவை குற்றம் சொல்லாதீர்கள். பக்கத்தாரிலே இந்த ஸெட்டைத்தான் வெச்சாங்க. நானும் வெச்சேன். அவருக்கு சங்கீதத்தைப் பற்றியோ, வேறு எந்த விஷயத்தில் ஆகட்டும், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் வாழ்க்கையில் முன் ஏறுவதற்கு அவ்வளவு தெரிந்தால் போதும். இந்தக் கலியாணத்தில் செல்வத்தோடு செல்வம் மணம் புரிந்து கொள்கிறது. இங்கு ஒரே பெண் அங்கும் ஒரே பிள்ளை. நாயுடு அரிசி மொத்த வியாபாரம். சம்பந்தி தோல் வியாபாரம். லஷ்மி விலாசம் பொருளையும், இடத்தையும் தேர்ந்தா எடுக்கிறது? அதற்கு எதுவுமே அவசியமில்லை. அதற்கு கிறுக்குப் பிடித்தால் உங்கள் கொல்லைப்புறத்தில் மண்கட்டி திடீரெனத் தங்கக்கட்டி. எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு காயுடு. அப்பா போஸ்ட் மாஸ்டர், அவள் தகப்பனுக்கு வந்திருக்கும் தபாலை வாங்க எப்போதேனும் வருவாள். வேலைக்காரன் வேறு ஜோலியாகப் போயிருந்தால். நாயுடுவே எப்போதேனும் வருவார். தபாலை வாங்குவதோடு சரி. படித்துக் காட்டச் சம்பளத்துக்குக் கணக்குப்புள்ளே இருக்கிறார். காசோலை