பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gl)iT。 卒 Tff・ 14? அதுவே ஒரு கருவூலம் அது, என்னிடம் என்ன சொல்ல முயன்றது? அது இன்னும் என்னுடைய ப்ரத்யேக அதிசயம். எத்தனை வருடங்களாகி விட்டன. எத்தனை ஆனால் என்ன? பல காரணங்களால், வீட்டுக்குத் திரும்ப விருப்பம் இல்லாமல், சில கோடை இரவுகளில், கடற்கரையில் தனியாக உட்கார்ந்திருக்கையில், வானத்தில் நட்சத்திரங் கள் கூடைகூடையாகக் கொட்டி வாரியிறைக்கின்றன. எனக்கு ஒரு சித்தாந்தம். உலகத்தின் அத்தனை உயிர் களுக்கும் கூடுகளாம். நrத்திரங்கள் இங்கு பிறவி நீத்தவுடன் ஒவ்வொரு ஆவியும் வானில் அதனதன் கrத்திரக் கூட்டை அடைகிறது. அங்கு தான் அதற்கு ஒய்வு. மறுபலத்தின் ஊறல். மறுபடியும் அதன் வேளை யில், புட்கள் இரை தேடக் கிளம்புவது போல் பிறவி யெடுக்கப் புறப்படுகிறது. இங்கு இந்த நகடித்திரக் கொள்ளையில் அபிராமி எங்கே? ஜன்மாவின் இன்பத் திகைப்பு இதுதான். அவரவர்க்கு அவரவர் அபிராமி, வெவ்வேறு பெயர் களில். அதைப்போல் ஒவ்வொரு அபிராமிக்கும் அவளுடைய அபிராமன். ஒருவருக்கு மற்றவர் கrத்திரவாசம். -எட்டாப் பழமடியோ தெவிட்டாத தேனடியோ' விளம்பித் வீறிடுகிறது. '-கட்டுக் குழி படர்ந்த கருமுகில் காட்டுக்குள்ளே’ மறுபடியும் கிட்டப்பா. இந்த நகrத்திரக்காடும் அப்படித்தான். அபிராமியை இங்கே எங்கென்று தேடுவேன்? uirir?