பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து ல ம் து.ாலம் முறிந்து அம்மா மட்டும் நெடு நாட்களாகச் சொல்லிக்கொண்டி ருந்தாள்; அடே, உளுத்துப் போச்சுடா. செல்லுப் புழு தாராளமா புகுந்து புறப்படறதடா. கவனிங்கோடா. அப்பா வீடு வாங்கின் சமத்தை மெச்சிக்கோ. (வெளி யில் சொல்லவில்லை) என்னை என்ன பண்ணச் சொல்றே நானும் விசாரிச்சாச்சு. இரண்டு தூலங்கள்ை யும் மாற்ற, கூலி உட்பட 450 ரூபாய் ஆகுமாம். எதுக்கும் 500 ரூபாய் தயார் பண்ணி வெச்சுக்கிட்டு என்னைக் கூப்பி டுங்க. தச்சன் சிரிக்கிறான், துாலத்தைப் பார்த்து. தாலம் முறிந்து ஆனால் அப்பாவின் அவசரத்துக்குக் காரணம் உண்டு. அவருடைய காரணம்-காரணங்களில் எப்பவுமே போது கிடையாது.அவரவர்க்கு அவரவர் காரணம்-தனித்தனிக் காரணம். பாட்டி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். 'அம்பி, இதுவரை வாடகையாக் கொடுத்தே, ஒரு ஆயுசுக்கு சேர்த்த சொத்து அழிஞ்சிருக்கும். நமக்குன்னு ஒரு வீடு. எலிவளையானாலும் தனிவளை பார்த்துட்டுக் கண் மூடுவேனா? பாட்டி ஏங்கிண்டு இருந்த மாதிரி, அவள் காலத்தி லேயே அவள் சொந்த வீடு காணமுடியவில்லை. அதற்காக அவள் காத்திருந்ததில் குறைச்சலில்லை, மூடுகையில் 74, எங்கள் குடும்பத்துக்கே கார்ட் ப்ரேக்,