பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லர். ச. ரா. 22 í யின் வழிதலினின்று அவளுடைய சிரித்த முகம் வெளிப்படுவ தைப் பார்க்க வேணுமே! - அந்த அழகைப் பார்ப்பதற்கு எந்தப் பாலையேனும் ஊற்றிப் பார்க்கலாமே என்று ஒரு சமாதானம் மனதில் எழுந்தபோதிலும் அதே மனம் ஏற்க மறுத்தது. இப்படியும் ஒரு சபலம், உறுத்தலாகக் கிளம்பி, அதுவே படிப்படியாக ஒரு வெறியாக மாறுவது தெரியாமலே மாறும் அந்த அவஸ் தையில் பாஸ்கர் மாட்டிக்கொண்டு விட்டார். அவஸ்தை நிலை, அவகிலையாக மாறி விடுமோ போன்ற சிலை, அவரைப் பார்த்து, தெரிந்தவர்கள் ஒருவருக்கொருவர் கண் சிமிட்டும் கிலை, பேர் எரிச்சலே படும் சிலை. குடிக் கக்கூடத் தண்ணி இல்லாமல் குடத்தைத் தாக்கிக்கொண்டு ஒவ்வொருத்தன் அலையறான். இந்த மனுஷன் சாமிமேல் கொட்டறானாம். பொம்மைமேல் கொட்டறத்துக்கு அவ னும் குடத்தைத் தூக்கிக்கிட்டுப் பாலுக்கு அலையறா னாம். எப்படியிருக்குது கதை! . 'கூழுக்கு உப்பு இல்லை என்பாரும், பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பாரும்...' பாட்டு எப்பவோ எழுதிப் போட்டாச்சு. இதுக்குத் தான். ரேணு? அவள் புருஷனை இப்படிப் புரளி செய்வது அவளுக்கு எப்படி இருந்தது முதலில் இது என்ன அசட் டுக் கேள்வி. ஆனால் ரேணு விஷயத்தில் அந்தக் கேள்வி அசட்டுத்தனம்தானா? தோன்றக்கூடிய சந்தேகம்தான். கணவனுக்கேற்ற மனைவி. ஒருவர் வழியில் ஒருவர் குறுக் கிடுவதில்லை. இன்னிக்கு மஹா நைவேத்யத்துடன் வடை பாயஸம் என்று ஒருமுறை சொல்லிவிட்டால் போதும், பூஜை மணி சத்தம் கேட்டவுடனேயே தாமாக வந்துவிடும்.