பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


@fi • F • sffr, 33。 வீட்டு வாசலில் ஒரு மூலையில் எருமை மாட்டைக் கிழவன் கறக்கிறான். அது தினப்படி வீட்டுச் செலவுக்கு. ரேணு பாத்திரத்துடன் அவன் எதிரே நிற்கிறாள். மறுகோடியில் பாஸ்கர் ஒரு எவர்சில்வர் தூக்குடன். (கொஞ்சம் பெரிய தாக்குதான்) கறவல் அத்தனையும் அப்படியே வாங்கிக் கொள்வதாகப் பேச்சு. பால் நுரையோடு, குவளையில் உயர்ந்து கொண்டே வருவதைப் பார்க்கிறார். நுரை துளும்புகிறது. கொஞ்சம் குவளையினின்று தப்பி, காற்றில் அலைந்து பறக்கிறது. நன்றாய்த்தானிருக்கும் போலிருக்கு. சேட் காளைக்கும் பம்பாயிலேயே தங்கி விட்டால் எவ்வளவு நன்னாயிருக்கும்' சேட் பம்பாயிலேயே தங்கிவிடக்கூடாதா?’ பாஸ்கர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார். எத்தனை வயதானால் என்ன? மனிதனைச் சுரண்டினால் அடியில் சிறுபிள்ளைத்தனம் தான்! 'ஆ கறந்த பால் தேடற ஐயாவா? அது நீங்கதானா? வேறு யாரோன்னா பார்த்தேன்!” - பாஸ்கர் பதில் பேசவில்லை. அவருக்கு வழக்கம் கிடை யாது. கிழவன் பிள்ளைilஆ போட்டிருக்கிறான். பாஸ்கர் எப்பவுமே அனாவசியமாக வாயைக் கொடுக்கமாட்டார். அவருடன் சம்பாஷணை அநேகமாக ஒருதலையாகத்தான் அமையும். அதற்குக்கூட ஒரு knack வேனுமில்லே? "ஐயாகிட்டே ஒண்னு சொல்லனும்னு ரொம்பு நாளா எனக்கு எண்ணம். என் அப்பன் எதிரே இருக்கான். இருந்தாலும் சொல்றேன். நான் கல்லா போட்டிருக்கேன். எனக்குத் தெரியும். ஆனால் கான் போட்டிருக்கப்பத்தான்