பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

öyü • &° • ᏰᎢfT • 33 நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பிய கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது. ஸ்து பிபோல் உச்சியில் ஒரு குமிழ் வேறே; சீப்பைத் தப்பிவிட்ட பிடரிச் சுருள்கள் கினைவில் குறுகுறுக்கின்றன. பிறப்போடு வந்து விட்டாற் போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது. ரவிக்கை பூணாது, திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம், யார் இவள் முகம் பார்க்கு முன்-; - 'வயதானவர் மொட்டை மாடியில் படுக்கக் கூடாதுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. கேக்க மாட்டேன்கறேள் அப்பா-1” தோளைக் குலுக்கும் கையைத் தூக்கக் கலக்கத்தில் திமிரப் பார்க்கிறேன். தாக்கம் கலையவில்லை, கனவு கலைந்துவிட்டது. “எழுந்திருங்கோ அப்பான்னா!' முடியை அள்ளிச் செருகிக் கொண்டு சாந்தா முகத்தில் தான் இன்று முதல் முழி. வெட்டுக்கிளி போல் லேசாக ஆகாயத்தைப் பார்த்து அஞ்சலி , செய்யும் நாசிதுனியில், குந்துமணி, மண்ணைப் பிசைந்தவன் கிள்ளியெறிந்துவிட்ட தால் மூக்கு சற்றுமொண்ணை. முகத்தில் வெண்ணெய் பள பளக்கிறது. அவளும் பாவம் மாற்றி மாற்றிச் சந்தனத்தை அரைத்துப் போடுகிறாள்; மனமில்லாமல் மஞ்சளைப் பூசிக் கொள்கிறாள்; விக்கோ-டர்மரிக், கிளியர்ஸில், அப்பப்போ வர்த்தக ஒலிபரப்பில் என்னென்ன விளம்பரம் கேட் பா-3