பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G}詹。子。鲈方。 44 போய்ப் பார்க்கிறேன். தோய்க்கிற கல்லின்கீழ் விட்டிருக் கும் சந்தில் பாம்பு சட்டை. ஹரிணி குதிக்கிறாள், துள்ளுகிறாள், துடிக்கிறாள், முற்றுப்புள்ளியில்லாமல் கத்துகிறாள். அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுட்டு, ஒரு காளைப் பார்த்தாப்போல் நான் வயத்தில் நெருப்பைக் கட்டிண்டு. ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ. எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்கோ’மூச்சு விடாமல் வார்த்தைகளின் கோவை கூட சரியாகப் புரியாமல் இன்னும் ஏதேதோ குளறுபடி "ஆமாம் அதென்ன மயிலாப்பூர் கணக்கு: மாம்பலம்: சைதாப்பேட்டை, வடபழனி, சாலிக்ராமம், கங்க. நல்லூர் வேளச்சேரி-பேர்களுக்கா குறைச்சல் இடம்தான் ஊசி முனைக்குக்கூட வழியில்லை. 'கான்தான் லப லப லபன்னு அடிச்சுக்கிறேன். ஆனால் அழுத்தமா உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பதில் தானே! மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-' தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு வுெ.ாட்டு கொடுக் கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா? என் கையை உதறுகிறாள். 'காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு?’ ஹரிணிக்கு என்றைக்குமே ஒரு வழிப் பாதைதான். வீட்டுக்கு வந்த புதிதில், அந்த முகக்கடுப்பே அவளுக்கு ஒரு களை கொடுத்தது. அவள் வீட்டில் ஆறு அண்ணன் தம்பி களுக்கிடையில் அவள் ஒரே பெண். உடன் பிறந்தான்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தச் செல்லம் அவளுகுக் இன்னமும் செல்கிறது. அந்தக் கோபத்தின்