பக்கம்:புலவராற்றுப்படை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்ந்த முகத்தினன் - களிப்பான் மலர்ந்த முகத்தினை யுடையவனுய்,

முகத்தினனென்னுங் குறிப்புமுற்றுப் பெயரெச்சமாய் நின் நிறது.

நீயிர் யார் ஐ என வினவும் - நீவிர் யாரென்று தும்மைக் கேட்பன் ;

ஐ - அசை.

பெரும நின் அவை களம் ஒர்ந்து ஓரை இல் போந்தனென் எனின் - பெருமானே! நினதவைக்களத்தைக் கருதி நல்ல வேளை யில் வந்தேனென்று நீவிர் கூறுவீராயின்,

வருக என தழிஇ இருக்க என அருகு இரீஇ - வருவீராக வென்று தழுவி இருப்பீராக வென்று தன் பக்கத்தேயிருத்தி,

போற்றினிர் சென்ற நும் கவி அரங்கு ஏற்று - நீவிர் பேணிக்கொண்டு சென்ற நுங்கவியை அரங்கத்தே ஏற்றுக் கொண்டு,

ஆங்கு இருக்குநர் உளப்பட நச்சி மெச்சி - அங்கேயிருக்கு மச்சங்கப் புலவரெல்லாருமுள்பட நும்மை விரும்பி மெச்சி,

வாய் அரும் புலவன் பெரும் கவிராயன் பாவலன் வித்து வான் இயல் தெரிநாவலன் என்று உயர் பெயர்கள் உள் ஒன்று - வாயாலரிய புலவனும் பெரிய கவிராயனும் பாவலனும் இலக் கணந் தெரிந்த நாவலனுமென்றுயர் சிறப்புப்பெயர்களு ளொரு பெயரை, -

நுமக்கு உற களி வர நல்கி - துமக்குப் பொருந்தும்படி களிப்புண்டாகக் கொடுத்து,

ஊர்கோள் ஒருதலை மீன் இருந்து என்ன - ஊர்கோள் வட்டத்திலோரிடத்து விண்மீனென்றிருந்தாற்போல,

வால் நிறம் வயிரம் மின் செய்து ஒளிறும் பொன் செய் ஆழி உம் - வெள்ளிய வொளியையுடைய வயிரக்கல்விருந்து மின்னச் செய்து விளக்கும் பொன்ற்ைசெய்த மோதிரத்தையும்,

37

37