பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

முல்லை பிஎல். முத்தையா 47

46

காபியில் பாலைக் காட்டாதவர்

இரண்டு புலவர்கள் சிற்றுண்டி விடுதிக்குக் காபி குடிப்பதற்குச் சென்றனர். காபி வந்தது. பால் போதிய அளவு விடாததால், காபி கருமைநிறமாகக் காட்சி அளித்தது.

அதனைக் கண்ட புலவர், கடைகாரரே காபி கருமை நிறமாகக் காணப்படுகிறதே! பால் கூடுத லாகக் கலக்கப்படாதா?’ என்றார்.

மற்றொரு புலவர், சிற்றுண்டி விடுதியின் முன்னே, தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில், 'பாலைக் காட்டார் கிளப்' என்று எழுதியிருந்ததை அவர் உள்ளே போகும்போதே பார்த்துக் கொண்டு சென்றார்.

எனவே, அவர் தம் நண்பரான புலவரிடம் வெளியே போட்டிருந்த கிளப்பின் பெயரை, தாங் கள் பார்க்கவில்லையா? 'பாலைக் காட்டார் கிளப்பில் வந்து காபியில் பாலை காட்டவில்லை என்றால், எப்படி காட்டுவார்கள்?' என்றார்.

அதைக் கேட்ட முதல் புலவர், 'பாலைக்காடு' என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது; பெயருக்கு ஏற்றபடி, காபியில் பாலைக் காட்ட

نعي

வில்லை என்று தெரியவந்தது” என்றார்.