பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

முல்லை பிஎல். முத்தையா 49.

'நான் நூறு (நானூறு) தருவதாகத் கூறினீர்

கள்’’ எனவே நான் பொய் புகவில்லையே!” என்றார் புலவர்.

புலவரின் நயமான சொற்களைக் கேட்டு, மகிழ்ந்த மன்னர், புலவருக்கு நானுறு ரூாய் அளித்தார். -

48

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அறிவு

ஒரு சிற்றுாரின் உயர்நிலைப் பள்ளி மாணவ. னிடம், சிலப்பதிகாரத்தை எழுதியது யார்? என்று கேட்டார் தமிழ் ஆசிரியர்.

மாணவன் பயந்தபடியே, "நான் எழுத: வில்லை' என்று கூறினார்.

தமிழ் ஆசிரியருக்கு வியப்பு மேலிட்டது. ஏனெனில் அந்த மாணவனின் தந்தை பள்ளியின் ஆட்சிக்குழுவில் உறுப்பினராவார். அதனால் அவரிடம் சென்று விவரத்தைக் கூறினார் தமிழ் ஆசிரியர்.

'அவன்தான் எழுதியிருப்பான். உங்களுக்குப் பயந்து, தான் எழுதவில்லை' என்று சொல்லியிருக் கிறான் போகட்டும் அவனை விட்டு விடுங்கள் என்று சொன்னார் மாணவனின் தந்தை. தமிழ் ஆசிரிய ருக்கு வருத்தமும் சிரிப்பும் மேலிட்டது,